Tamil Christian Songs Collection cover art

Tamil Christian Songs Collection

Tamil Christian Songs Collection

By: Various
Listen for free

About this listen

Tamil Christian Songs CollectionCopyright 2021 Various Spirituality
Episodes
  • Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே
    Mar 6 2025

    Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே


    https://tamilchristiansongs.in/lyrics/um-maarbil-saainthaal-sugamae/


    உம் மார்பில் சாய்ந்தால் சுகமே

    உம் தோளில் கிடந்தால் ஜெயமே

    உம் கைகள் என்னில்

    கோர்த்தால் பரிசுத்தமே

    உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே – உம் மார்பில்


    மானானது நீரோடையை

    வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன்

    உம் அன்பிலே மூழ்கணுமே

    உம்மோடு என்றென்றும் நடக்கணுமே – உம் மார்பில்


    மணவாளனே உமக்காகவே

    பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன்

    மணவாட்டி என்னை உம் வருகையில்

    உம்மோடு சேர்த்து கொள்வீரா – உம் மார்பில்

    Show More Show Less
    5 mins
  • Kalvari Anbai Ennidum Velai - கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    Mar 6 2025
    Kalvari Anbai Ennidum Velai - கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

    https://tamilchristiansongs.in/lyrics/kalvari-anbai-ennidum-velai/

    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
    கண்கள் கலங்கிடுதே- கர்த்தா
    உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
    நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

    கெத்செமனே பூங்காவினில்
    கதறி அழும் ஓசை
    எத்திசையும் தொனிக்கின்றதே
    எங்கள் மனம் திகைக்கின்றதே
    கண்கள் கலங்கிடுதே

    சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
    உம்மை செந்நிறம் ஆக்கினரோ
    அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
    அன்போடு அவர்களை கண்டீரன்றோ
    அப்பா உம் மனம் பெரிதே

    எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
    உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை
    தரை மட்டும் தாழ்த்துகிறோம்
    தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
    ஏற்று என்றும் நடத்தும்

    Show More Show Less
    5 mins
  • Thanthen Ennai Yesuve - தந்தேன் என்னை இயேசுவே
    Mar 6 2025
    Thanthen Ennai Yesuve

    https://tamilchristiansongs.in/tamil/lyrics/thanthen-ennai-yesuve/

    தந்தேன் என்னை இயேசுவே
    தந்தேன் என்னை இயேசுவே
    இந்த நேரமே உமக்கே

    அனுபல்லவி

    உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
    தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன்

    சரணங்கள்

    1. ஜீவ காலம் முழுதும்
    தேவ பணி செய்திடுவேன்
    பூவில் கடும் போர் புரிகையில்
    காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன்

    2. உலகோர் என்னை நெருக்கிப்
    பலமாய் யுத்தம் செய்திடினும்
    நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
    நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன்

    3. உந்தன் சித்தமே செய்வேன்
    எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
    எந்த இடம் எனக்குக் காட்டினும்
    இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன்

    4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
    துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
    அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
    அடியேன் உம்மில் அமரச் செய்திடும் — தந்தேன்

    5. ஒன்றுமில்லை நான் ஐயா
    உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
    அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
    இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன்
    Show More Show Less
    4 mins
No reviews yet